நாடு முழுவதும் எதிர்வரும் மாதமளவில் மரக்கறிகளுக்கு தட்டுப்பாடு ஏற்படுமென அகில இலங்கை பொருளாதார மத்திய நிலைய சங்கம் தெரிவிக்கிறது.
தற்சமயம் ஏற்பட்டுள்ள உரத் தட்டுப்பாடு மற்றும் சீரற்ற வாநிலை காரணமாக இந்த நிலை ஏற்படும் என சங்க தகவல்கள் மூலம் அறியப்படுகிறது.
அத்துடன் பெனின் சந்தைக்கு நாளாந்தம் கிடைக்கப்பெறும் மரக்கறிகளின் தொகை 60 சதவீதத்தினால் குறைவடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.