உலக அளவில் அண்மையில் பிரசித்திபெற்ற இலங்கை இளம் பாடகி யொஹானி டி சில்வா, ஐக்கிய அரபு இராச்சிய தேசிய தினத்தை முன்னிட்டு டுபாயில் இசை நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவுள்ளார்.
எதிர்வரும் 2ஆம் திகதியன்று ஐக்கிய அரபு இராச்சிய தேசிய தினத்தை முன்னிட்டு டுபாயில் உள்ள உலக வர்த்தக மைய கட்டடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பிரம்மாண்ட இசை நிகழ்ச்சிக்கு பாடகி யொஹானிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை டுபாயில் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் இடம்பெறவுள்ள கண்காட்சியொன்றிலும் அவர் பங்குபற்றவுள்ளார்.
இலங்கையின் இளம் பாடகி உலக புகழ்பெற்ற யொஹானி டி சில்வாவின், மெனிக்கே மகே ஹித்தே என்ற பாடல் குறுகிய காலத்தில் உலகளவில் புகழ் பெற்றதுடன், இதுவரை யூடியூப் தளத்தில் 180 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.