மரக்கறிகளின் விலையில் பாரிய வீழ்ச்சி..!

சந்தையில் மரக்கறிகளின் விலை 40 சதவீதத்தால் குறைவடைந்துள்ளதாக நுவரெலியா விசேட பொருளாதார மத்திய நிலையத்தின் தலைவர் அனுர சாந்த ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

அதிகரித்த விலை காரணமாக நுகர்வோர் பதிலீட்டு உணவுகளை நோக்கி நகர்ந்தமையினால்; விலை குறைவடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த சில நாட்களாக சந்தையில் 2,500 ரூபாவாக காணப்பட்ட கரட் ஒரு கிலோ கிராமின் விலை தற்போது 800 ரூபா வரை குறைவடைந்துள்ளது.

அத்துடன் கோவா, வெண்டைக்காய், பீட்ரூட், போஞ்சி என்பவற்றின் விலையும் குறைவடைந்துள்ளதாக நுவரெலியா விசேட பொருளாதார மத்திய நிலையத்தின் தலைவர் அனுர சாந்த ஹெட்டியாராச்சி மேலும் தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version