உலககிண்ணத்தில் இலங்கைக்கு அடுத்தடுத்த தோல்வி

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையில் 19 வயதிற்குட்பட்ட உலகக்கிண்ணத்தின் 26 போட்டி கிம்பெர்லீயில் சுப்பர் சிக்ஸ் போட்டியாக நடைபெற்றது. இந்த போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 3 விக்கெட்களினாக் வெற்றி பெற்றது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பாடிய இலங்கை அணி 50 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 231 ஓட்டங்களை பெற்றது. இதில் டினுற கலுபஹான 53(83) ஓட்டங்களையும், மாலஷா தருபதி 42(38) ஓட்டங்களையும், சுபுன் வதுகே 31(40) ஒட்டகளையும் பெற்றனர். பந்துவீச்சில் ரனெய்க்கோ ஸ்மித் 4 விக்கெட்களையும், நேதான் எட்வெர்ட் 2 விக்கெட்களையும், நேதான் சீலி, டரிக் எட்வெர்ட் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களையும் கைப்பற்றினார்கள்.

பதிலுக்கு துடுப்பாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 49.3 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 232 ஓட்டங்களை பெற்றது. இதில் ஸ்டீவ் வெடபேர்ன் 61(71) ஓட்டங்களையும், ஜோர்டன் ஜோன்சன் 39(46) ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் டினுற கலுபஹான, சினெத் ஜெயவர்த்தன, விஷ்வ லஹிரு ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் கைப்பற்றினார்கள்.

இந்த போட்டியின் நாயகனாக ஸ்டீவ் வெடபேர்ன் தெரிவு செய்யப்பட்டார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version