இலங்கை அணியின் தெரிவு வலயத்துக்குள் வியாஸ்காந்த்

இலங்கை, பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான 20-20 தொடருக்கான அணி தெரிவில் விஜயகாந்த் வியாஸ்காந்த் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டதாக இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழுவின் தலைவர் உப்புல் தரங்க தெரிவித்துள்ளார். கடந்த திங்கட்கிழமை ஸ்ரீலங்கா கிரிக்கெட்டில் நடைபெற்ற ஊடாக சந்திப்பில் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

அணியின் தெரிவில் மூன்றாவது சுழற்பந்து வீச்சாளராக டுனித் வெல்லாளகே நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக சேர்ப்பதற்கு வியாஸ்காந்த் மற்றும் ஜெப்பிரி வன்டர்சாய் ஆகியோர் கவனத்தில் எடுக்கப்பட்டதாகவும், ஜெப்பிரி வன்டர்சாய் அனுபவம் வாய்ந்தவர் என்ற காரணத்தினாலும், உலகக்கிண்ண தொடருக்கு அவரை அணியில் வைத்திருப்பது சிறந்தது என்ற காரணத்தினால் அவரை அணியில் சேர்த்ததாக உப்புல் தரங்க கூறினார்.
வியாஸ்காந்த் சிறப்பாக செயற்பட்டு வாருவதாக மேலும் உப்புல் தரங்க கூறியுள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version