சதம் கடந்த சூர்யகுமார் யாதவ்..! 

இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது. 

மும்பையில் இன்று(06.05) நடைபெற்ற இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி களத்தடுப்பை தெரிவு செய்தது. 

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 173 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. 

ஹைதராபாத் அணி சார்பில் டிராவிஸ் ஹெட் 48 ஓட்டங்களையும், பட் கம்மின்ஸ் 35 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். 

மும்பை அணி சார்பில் பந்துவீச்சில் ஹட்ரிக் பாண்டியா, பியூஷ் சாவ்லா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 

174 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மும்பை அணி 17.2 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை கடந்தது. 

மும்பை அணி சார்பில் சூர்யகுமார் யாதவ் 102 ஓட்டங்களையும், திலக் வர்மா 37 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். 

இதன்படி, இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 7 விக்கெட்டுகளினால் வெற்றியீட்டியதுடன் போட்டியின் ஆட்ட நாயகனாக மும்பை அணியின் சூர்யகுமார் யாதவ் தெரிவு செய்யப்பட்டார். 

இந்த போட்டியில் வெற்றியீட்டிய மும்பை அணி ஐ.பி.எல் தொடரின் தரவரிசை பட்டியலில் 8 புள்ளிகளுடன் 9ம் இடத்திலும், ஹைதராபாத் அணி 12 புள்ளிகளுடன் 4ம் இடத்திலும் உள்ளது.  

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version