ராஜஸ்தானுக்கு அதிர்ச்சியளித்த டெல்லி அணி – IPL 2024

இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி கப்பிட்டல்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது. 

டெல்லியில் இன்று(07.05) நடைபெற்ற இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் அணி களத்தடுப்பை தெரிவு செய்தது. 

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய டெல்லி அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 221 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. 

டெல்லி அணி சார்பில் அபிஷேக் பூரல் 65 ஓட்டங்களையும், ஜேக் ஃப்ரேசர் மெக்குர்க் 50 ஓட்டங்களையும், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 41 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். 

ராஜஸ்தான் அணி சார்பில் பந்துவீச்சில் ரவிச்சந்திரன் அஸ்வின் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

222 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 201 ஓட்டங்களைப் பெற்று தோல்வியடைந்தது. 

ராஜஸ்தான் அணி சார்பில் அணித் தலைவர் சஞ்சு சாம்சன் 86 ஓட்டங்களையும், ரியான் பராக் 27 ஓட்டங்களையும், சுப்மன் டுபே 25 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். 

டெல்லி அணி சார்பில் பந்துவீச்சில் கலீல் அஹமட், முகேஷ் குமார், குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 

இதன்படி, இந்த போட்டியில் டெல்லி கப்பிட்டல்ஸ் அணி 20 ஓட்டங்களினால் வெற்றியீட்டியதுடன் போட்டியின் ஆட்ட நாயகனாக டெல்லி அணியின் குல்தீப் யாதவ் தெரிவு செய்யப்பட்டார். 

இந்த போட்டியில் வெற்றியீட்டிய டெல்லி அணி ஐ.பி.எல் தொடரின் தரவரிசை பட்டியலில் 12 புள்ளிகளுடன் 5ம் இடத்திற்கு முன்னேறியதுடன், ராஜஸ்தான் அணி 16 புள்ளிகளுடன் தொடர்ந்தும் 2ம் இடத்திலும் உள்ளது.  

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version