NPL 2024 – இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது Mullai Panthers அணி

Vavuniya Vikings மற்றும் Mullai Panthers அணிகளுக்கிடையில் இன்று (01.06) நொர்தேர்ன் பிரீமியர் லீகின் இரண்டாவது தெரிவுகாண் போட்டி வவுனியா நகரசபை மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் Mullai Panthers அணி 1 விக்கெட்டினால் வெற்றி பெற்று Jaffna Gladiators அணியுடன் இறுதிப்போட்டியில் நாளை (02.06) இறுதிப்போட்டியில் விளையாடவுள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற Mullai Panthers அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.

முதலில் துடுப்பாடிய Vavuniya Vikings அணி 19.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 140 ஓட்டங்களை பெற்றது. இதில் சிவானந்தன் மௌத்ஷன் 34(23) ஓட்டங்களையும், பரமசிவம்பிள்ளை நிஷாந்தன் 24(16) ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் சிவராஜா வினோஜ், குமாரசாமி சதுர்ஜனன் ஆகியோர் தலா 3 விக்கெட்களையும், அருணோதயன் அஞ்சயன் 2 விக்கெட்களையும் கைப்பற்றினார்கள்.

பதிலுக்கு துடுப்பாடிய Mullai Panthers அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 141 ஓட்டங்களை பெற்றது. இதில் அருணோதயன் அஞ்சயன் 46(29) ஓட்டங்களையும், எஸ். ஷஜித் ஆட்டமிழக்காமல் 33(33) ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் கே. கிருஷிகன் 3 விக்கெட்களையும், எஸ். பானுஷன், சிவானந்தன் மௌத்ஷன், பாலநாதன் யசோதரன், ஜிதர்ஷன் ஷண்முகப்பிள்ளை ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களையும் கைப்பற்றினார்கள்.

இந்த போட்டியின் நாயகனாக அருணோதயன் அஞ்சயன் தெரிவு செய்யப்பட்டார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version