இலங்கை படைப்பாளர்களால் தயாரிக்கப்பட்ட குறும்படத்திற்கு சர்வதேச அங்கிகாரம்

இலங்கை படைப்பாளர்களால் தயாரிக்கப்பட்ட ‘தொட்டி மீன்கள்’ என்ற குறும்படம் படம் 7TH SOUTH ASIAN SHORT FILM FESTIVAL (SASFF)’ க்கு தெரிவாகியுள்ளதாக
மணிவாணன் மற்றும் படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

அந்த அறிவிப்பில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

“எமது ‘தொட்டி மீன்கள்’ குறும்படம் ‘7TH SOUTH ASIAN SHORT FILM FESTIVAL (SASFF)’ க்கு தெரிவாகியுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.

எமது கனவுகளுக்காக உழைத்த படக்குழுவினருக்கும், இந்தக் கடினமான சினிமா பயணத்தில் நீண்ட நாட்களாக நேர்மையான உள்ளத்துடன்,
உடன் பயணிக்கும் எமது குழுவினருக்கும் நன்றிகள்.

இந்தப் படைப்புக்கு ஒரு சர்வதேச அங்கிகாரம் கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கும் என் உடன் பயணித்த எனது குழுவினருக்கும் இருந்தது,
அந்த அங்கிகாரத்தை ஒரு அந்தஸ்து மிக்க திரைப்பட விழா கொடுத்திருப்பது என்பது பெரும் மகிழ்ச்சி.

திரைப்பட விழா ஜூலை மாதம் 07- 13 கொல்கத்தாவில் நடபெறவுள்ளது.

மேலதிக விபரங்களுக்கு

இதுவரை நீங்கள் கொடுத்த அன்புக்கும் ஆதரவுக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்”

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version