கிண்ணியாவில் மிதப்பு படகு நீரில் மூழ்கி விபத்துக்குள்ளாகி 6 பேர் உயிரிழந்த சம்பவத்தினை தொடர்ந்து இன்றைய தினம் (25/11) அங்கு துக்க தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.
குறித்த சம்பவம் தொடர்பில் நேற்று (24/11) பிரதான சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டிருந்ததுடன், புதிய பஸ் சேவையும் அப்பகுதியில் இயக்கப்பட்டிருந்தது.
எனினும் ஆத்திரமடைந்த பொதுமக்கள் பஸ்ஸை வழிமறித்து எதிர்ப்பு நடவடிக்கைகளில் நேற்று ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் இன்று துக்க தினமாக அனுஷ்டிப்பதற்கு அங்குள்ள பொது அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன.