யாழில் தீவிரமடையும் டெங்கு

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தற்போது டெங்கு காய்ச்சல் தீவிரமாக அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

யாழ் மாவட்டத்தில் கடந்த 3 வாரங்களில் மட்டும் சுமார் 21 பேர் டெங்கு தொற்றாளர்கள் அனுமதிக்கப்ட்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்தவகையில் யாழ்ப்பாணம், நல்லூர், கோப்பாய், சண்டிலிப்பாய், வேலணை, தெல்லிப்பிழை, பளை போன்ற பிரதேசங்களை சேர்ந்தவர்களே சிகிச்சைப் பெற்றுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் டெங்கு நுளம்பு பரவும் பகுதிகளை சுத்தமாக வைத்திருக்க மக்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

யாழில் தீவிரமடையும் டெங்கு
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version