சூப்பர் 8: மேற்கிந்திய தீவுகள் அணிக்கு அபார வெற்றி

டி20 உலகக் கிண்ணத் தொடரின் சூப்பர் 8 சுற்றில் அமெரிக்க அணிக்கு எதிரான போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றியீட்டியது. மேற்கிந்திய தீவுகள், பார்படோஸில் இன்று(22.06) நடைபெற்ற இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி களத்தடுப்பை தெரிவு செய்தது

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய அமெரிக்கா அணி 19.5 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 128 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. அமெரிக்க அணி சார்பில் அண்ட்றிஸ் கௌஸ் 29 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். மேற்கிந்திய தீவுகள் அணி சார்பில் பந்துவீச்சில் ரசல், ரோஸ்டன் சேஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களையும், அல்சாரி ஜோசப் 2 விக்கெட்டுக்களையும் பெற்றுக் கொண்டனர். 

129 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 10.5 ஓவர்களில் ஒரு விக்கெட்டினை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை கடந்தது. மேற்கிந்திய தீவுகள் அணி சார்பில் சாய் ஹோப் 82 ஓட்டங்களையும், நிகோலஸ் பூரான் 27 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். 

இதன்படி, இந்த போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 9 விக்கெட்டுகளினால் வெற்றியீட்டியதுடன், போட்டியின் ஆட்ட நாயகனாக மேற்கிந்திய தீவுகள் அணியின் ரோஸ்டன் சேஸ் தெரிவு செய்யப்பட்டார். 

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version