இலங்கை 19 வயதிற்குட்பட்ட அணிக்கு அபார வெற்றி

இலங்கை 19 வயதிற்குட்பட்ட மற்றும் இங்கிலாந்து 19 வயதிற்குட்பட்ட அணிகளுக்கிடையில் நேற்று(28.06) இங்கிலாந்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இலங்கை அணி 65 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.

முதலில் துடுப்பாடிய இலங்கை அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 294 ஓட்டங்களை பெற்றது. இதில் மஹித் பெரேரா ஆட்டமிழக்காமல் 58 ஓட்டங்களையும், ஷாருஜன் 57 ஓட்டங்களையும், டினிரு அபேவிக்ரமசிங்க 52 ஓட்டங்களையும் டினுற களுபஹான 49 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் நொவாஹ் கொர்ன்வல் 3 விக்கெட்களை கைப்பற்றினார்கள். இதுவே ஷாருஜனின் முதலாவது அரைச்சதமாகும்.

பதிலுக்கு துடுப்பாடிய இங்கிலாந்து அணி 43.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 229 ஓட்டங்களை பெற்றது. இதில் நொவாஹ் தைன் 58 ஓட்டங்களையும், லக் பென்கென்ஸ்டீன் 51 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் விஹாஸ் தெவ்மிக 3 விக்கெட்களையும், ஹிவின் கெனுல, திசர ஏக்கநாயக்க பிரவீன் மனீஷ ஆகியோர் 2 தலா 2 விக்கெட்களையும் கைப்பற்றினார்கள்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version