போக்குவரத்து வழமைக்குத் திரும்பியது

குருநாகல் – அநுராதபுரம் வீதி போக்குவரத்து மீண்டும் வழமைக்குத் திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வாரியபொல பொலிஸார் இதனை தெரிவித்தனர்.

தெதுரு ஓயாவின் வான்கதவுகள் திறக்கப்பட்டமையினால், குருநாகல் மாவட்டத்தின் எபவலப்பிட்டி பிரதேசம் நீரில் மூழ்கியிருந்தது. இதன் காரணமாக நேற்றைய தினம் (25/11) வாகனப் போக்குவரத்துக்கு தடை ஏற்பட்டு குறித்த பகுதி மூடப்பட்டிருந்தது.

எனினும் குறித்த பகுதியில் நீர் முழுமையாக வழிந்தோடியுள்ளதனை அடுத்து, அவ்வீதியூடான போக்குவரத்து வழமைக்குத் திரும்பியுள்ளதாக வாரியபொல பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

போக்குவரத்து வழமைக்குத் திரும்பியது
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version