உடனடி இறக்குமதிக்கு உத்தரவு

கொவிட் 19 தொற்றாளர்களுக்கு வாய் வழியாக வழங்கப்படும் Molnupiravir என்ற மருந்தை இலங்கையில் இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியுள்ளார்.

இன்று (26/11) இடம்பெற்ற கொவிட் தடுப்பு செயலணி கூட்டத்தின் போதே ஜனாதிபதி இந்த பணிப்புரையை விடுத்துள்ளார்.

அதற்கமைய, கொவிட் தடுப்பூசிகளை இறக்குமதி செய்ததை போலவே அரச மருந்தாக்கல் கூட்டுதாபனத்தின் ஊடாக குறித்த மருந்துகளையும் நாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்குமாறு இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமனவுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார்.

உடனடி இறக்குமதிக்கு உத்தரவு
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version