LPL – சுப்பர் ஓவரில் காலி அணி வெற்றி

கோல் மார்வல்ஸ், மற்றும் தம்புள்ளை சிக்சேர்ஸ் அணிகளுக்கிடையிலான லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இன்றைய(14.07) முதற்போட்டி சுப்பர் ஓவரில் கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நிறைவுக்கு வந்தது. இந்தப் போட்டியில் கோல் மார்வல்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.

சுப்பர் ஓவரில் தம்புள்ளை அணி 2 விக்கெட்களையும் இழந்து 06 ஓட்டங்களை 5 பந்துகளில் பெற்றது. மஹீஸ் தீக்ஷண பந்துவீசியிருந்தார்.


7 ஓட்டங்கள் என்ற இலக்குடன் துடுப்பாடிய கோல் மார்வல்ஸ் அணி பந்துகளில் வெற்றி பெற்றது. 7 ஓட்டங்கள் என்ற இலக்குடன் துடுப்பாடிய கோல் மார்வல்ஸ் அணி 04 பந்துகளில் வெற்றி பெற்றது. நுவான் துஷார தம்புள்ளை அணி சார்பில் பந்துவீசியிருந்தார்.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தம்புள்ளை சிக்சேர்ஸ் அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.

149 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்குடன் துடுப்பாடிய தம்புள்ளை சிக்சேர்ஸ் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் குஷல் பெரேரா தனது முதற் பந்திலேயே ஆட்டமிழந்தார். ரீஷா ஹென்றிக்ஸ், இப்ராஹிம் ஷர்டான் ஜோடி இணைப்பாட்டம் ஒன்றை கட்டியெழுப்ப ஆரம்பித்த வேளையில் இப்ராஹிம் ஷர்டான் 30(18) ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். லஹிரு உதார 12(11) ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். மார்க் சப்மன் மற்றும் சமிந்து விஜயசிங்க ஆகியோர் தலா 4 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர். தம்புள்ளை அணி விக்கெட்களை இழந்தது தடுமாறிய போதும் ரீஷா ஹென்றிக்ஸ் சிறந்த துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றி இலக்குக்கு அழைத்துச் சென்றார். இறுதி ஓவரில் 72(57) ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார். இறுதி நேரத்தில் மொஹமட் நபி நல்ல இணைப்பாட்டத்தை வழங்கி வெற்றியை இலகுபடுத்திய போதும் இறுதிப் பந்தில் ரன் அவுட் மூலம் ஆட்டமிழக்க போட்டி சமநிலையானது. அவர் 21(16) ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.

இறுதி ஓவரில் 8 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில் மஹீஸ் தீக்ஷ்ண 7 ஓட்டங்களை வழங்கி போட்டியை சமநிலையில் நிறைவு செய்ய கைகொடுத்தார்.

தம்புள்ளை அணி 20 ஓவர்களில் 07 விக்கெட்களை இழந்து 148 ஓட்டங்களை பெற்றது.

பந்துவீச்சில் டுவைன் பிரட்ரோரியஸ் 03 ஓவர்கள் பந்துவீசி 27 ஓட்டங்களை வழங்கி 01 விக்கெட்டை கைப்பற்றினார். மஹீஸ் தீக்ஷண 04 ஓவர்கள் பந்துவீசி 26 ஓட்டங்களை வழங்கி 03 விக்கெட்களை கைப்பற்றினார். கவிந்து நதீஷான் 4 ஓவர்கள் பந்துவீசி 29 ஓட்டங்களை வழங்கி 01 விக்கெட்டை கைப்பற்றினார். சஹான் ஆராச்சிகே 3 ஓவர்கள் பந்துவீசி 13 ஓட்டங்களை வழங்கி 01 விக்கெட்டை கைப்பற்றினார்.

முதலில் துடுப்பாடிய காலி அணி அலெக்ஸ் ஹேல்ஸின் அதிரடியான துடுப்பாட்டம் மூலம் நல்ல ஆரம்பத்தை பெற்றது. நிரோஷன் டிக்வெல்ல 07(10) ஓட்டங்களோடு ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து 38(26) ஓட்டங்களோடு ஹேல்ஸ் ஆட்டமிழந்தார். சிறிய இடைவெளியில் பானுக்க ராஜபக்ஷ 01(05) ஓட்டத்துடன் ஆட்டமிழக்க காலி அணியின் தடுமாற்றம் ஆரம்பமானது. ரிம் செய்பேர்ட் 13(14) ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். ஜனித் லியனகே 13(14) ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். டுவைன் பிரட்ரோரியஸ் 16(12) ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். ஷகான் ஆராச்சிஹே 15(12) ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். இசுரு உதான 02(04) ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

கோல் மார்வல்ஸ் அணி 20 ஓவர்களில் 08 விக்கெட்களை இழந்து 148 ஓட்டங்களைப் பெற்றது.

மொஹமட் நபி 4 ஓவர்களில் 14 ஓட்டங்களை வழங்கி 02 விக்கெட்களையும், டுஸான் ஹேமந்த 4 ஓவர்களில் 19 ஓட்டங்களை வழங்கி 02 விக்கெட்களையும், டில்ஷான் மதுசங்க 4 ஓவர்களில் 19 ஓட்டங்களை வழங்கி 02 விக்கெட்களையும் கைப்பற்றினார்கள். சமிந்து விக்ரமசிங்க 01 ஓவர் பந்துவீசி 09 ஓட்டங்களை வழங்கி 01 விக்கெட்டை கைப்பற்றினார். நுவான் துஷார 4 ஓவர்கள் பந்துவீசி 33 ஓட்டங்களை வழங்கி 01 விக்கெட்டை கைப்பற்றினார். நுவான் பிரதீப் 4 ஓவர்களில் ஓட்டங்களை வழங்கி விக்கெட்களை கைப்பற்றினார்.

காலி அணி 7 போட்டிகளில் விளையாடி 5 வெற்றிகளோடு 10 புள்ளிகளைப் பெற்று இரண்டாமிடத்தில் தொடர்கிறது. தம்புள்ளை அணி 6 போட்டிகளில் விளையாடி 4 புள்ளிகளோடு நான்காமிடத்தில் தொடர்கிறது.

யாழ் மற்றும் காலி அணிகள் அடுத்த சுற்று வாய்ப்பை பெற்றுள்ளன. கண்டி. தம்புள்ளை, கொழும்பு ஆகிய மூன்று அணிகளும் அடுத்த சுற்றுக்கான வாய்ப்புகளுடன் காணப்படுகின்றன.

அணி விபரம்

காலி அணி மாற்றங்களின்றி விளையாடுகிறது. தம்புள்ளை அணி சார்பாக நுவனிது பெர்னாண்டோ நீர்க்கப்பட்டு இப்ராஹிம் ஷர்டான் இன்று விளையாடுகிறார்.

கோல் மார்வல்ஸ் – பானுக்க ராஜபக்ஷ, நிரோஷன் டிக்வெல்ல, மஹீஸ் தீக்ஷண, ரிம் ஷெய்பேர்ட், அலெக்ஸ் ஹேல்ஸ், ஜனித் லியனகே, டுவைன் ப்ரட்டோரியஸ், ஷஹான் ஆராச்சிகே, பிரபாத் ஜயசூரிய, இசுரு உதான,கவிந்து நதீஷான்

தம்புள்ள சிக்சேர்ஸ் – இப்ராஹிம் ஷர்டான், குஷல் ஜனித் பெரேரா, மொஹமட் நபி, மார்க் சப்மன், சமிந்து விக்ரம்சிங்கே, துஷான் ஹேமந்த, டில்ஷான் மதுசங்க , ரீஷா ஹென்றிக்ஸ்,லஹிரு உதார, நுவான் பிரதீப், நுவான் துசார

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version