கொழும்பு இந்துக் கல்லூரிக்கு அபார வெற்றி 

கொழும்பு இந்துக் கல்லூரி மற்றும் ஸ்ரீ பராக்கிரம மகா வித்தியாலயத்திற்கு இடையில் இன்று(19.07) நடைபெற்ற 17 வயதுக்குட்பட்ட பாடசாலைகளுக்கிடையிலான Division 03 போட்டியில் கொழும்பு இந்துக் கல்லூரி அணி அபார வெற்றியீட்டியுள்ளது. 

போட்டியில் முதலாவதாக துடுப்பெடுத்தாடிய கொழும்பு இந்துக் கல்லூரி அணி முதல் இன்னிங்ஸிற்காக 8 விக்கெட் இழப்பிற்கு 356 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. 

கொழும்பு இந்துக் கல்லூரி சார்பில், யாதவ் 115(113) ஓட்டங்களையும், மிதுஷிகன் 87(81) ஓட்டங்களையும், சதுர்ஷன் 40(53) ஓட்டங்களையும், ஹர்ஷா 31(27) ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். 

ஸ்ரீ பராக்கிரம மகா வித்தியாலய சார்பில் பந்துவீச்சில், பிம்சர 3 விக்கெட்டுக்களையும், விமுக்தி 2 விக்கெட்டுக்களையும், சேனாரத்ன ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாட ஆரம்பித்த ஸ்ரீ பராக்கிரம மகா வித்தியாலய அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 93 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியடைந்தது. 

ஸ்ரீ பராக்கிரம மகா வித்தியாலயம் சார்பில், அதேஷ் கவின் 51(34) ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார். 

கொழும்பு இந்துக் கல்லூரி சார்பில் பந்து வீச்சில், ஆகாஷ் 4 விக்கெட்டுக்களையும், ஷகிந்தன், தேஷ்கர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும் பெற்றுக்கொண்டனர். 

இதன்படி, இந்த போட்டியில் கொழும்பு இந்துக் கல்லூரி 263 ஓட்டங்களினால் அபார வெற்றியீட்டியது. 

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version