இலங்கை எதிர் இந்தியா: போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை ஆரம்பம் 

இலங்கை மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையிலான டி20 மற்றும் சர்வதேச ஒரு நாள் போட்டிகளுக்கான இணைய வழியினுடான டிக்கெட் விற்பனை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

https://mycricket.com.lk/slcb-ticketing-frontend-ticketing-platform-ui/home எனும் இணையத்தளத்தினுடாக டிக்கெட்டுக்களை கொள்வனவு செய்ய முடியும். 

மேலும், கீழ் காணும் இடங்களில் நாளை(24.07) முதல் நேரில் சென்று டிக்கெட்டுக்களை கொள்வனவு செய்ய முடியும்.

போட்டி நடைபெறாத நாட்களில், 

  • கண்டி, பல்லேகல மைதானம் (ஊடக மையம்) – காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை
  • கொழும்பு, ஆர். பிரேமதாச மைதானம் – காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை
  • கொழும்பு, வித்யா மாவத்தை (SSC மைதானத்திற்கு அருகில்) – காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை 

போட்டி நடைபெறும் தினங்களில், 

  • கண்டி, பலகொல்ல, அபீதா மைதானம் – காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை
  • கொழும்பு, வித்யா மாவத்தை (SSC மைதானத்திற்கு அருகில்) – காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை
  • கொழும்பு, ஒருகொடவத்தை, புதிய போதிராஜா மாவத்தை – காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை 

டிக்கெட் விலைகள், 

டி20 போட்டிகள் கண்டி, பல்லேகல மைதானத்தில் எதிர்வரும் 27, 28 மற்றும் 30ம் திகதிகளிலும், சர்வதேச ஒரு நாள் போட்டிகள் கொழும்பு, ஆர். பிரேமதாச மைதானத்தில் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 2, 4 மற்றும் 7ம் திகதிகளிலும் நடைபெறவுள்ளது. 

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version