மீண்டும் வழமைக்குத் திரும்பியது

கொழும்பிலிருந்து பதுளை நோக்கி சேவையில் ஈடுபடும் ‘பொடி மெனிக்கே’ புகையிரத சேவை இன்று (29/11) முதல் மீண்டும் வழமைக்குத் திரும்பியுள்ளது.

சீரற்ற வாநிலையின் காரணமாக சில புகையிரத சேவைகள் இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்தமையை தொடர்ந்து, அவற்றை இன்று முதல் சேவையில் ஈடுபடுத்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக புகையிரத கட்டுபாட்டு அறை தெரிவித்துள்ளது.

அதற்கமைய, ‘பொடி மெனிக்கே’ மாத்திரமின்றி, கொழும்பு – மட்டக்களப்புக்கு இடையிலான ‘மீனகயா’ கடுகதி புகையிரத சேவையும் நேற்று (28/11) முதல் சேவையில் ஈடுபடுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் வழமைக்குத் திரும்பியது
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version