‘பார்வைக் குறைபாடு இனி படிப்படியாக குறையும்’

நம்மில் பலரும் சிறுவர் முதல் பெரியோர் வரை மூக்குக்கண்ணாடி அணிந்த வண்ணமே இருக்கின்றோம். இன்றைய காலக்கட்டத்தில் தோன்றும் புதுப்புது நோய்களில் பல காலமாக அனைவருக்கும் இலகுவில் ஏற்படும் ஒரு தான் இந்த பார்வைக் குறைபாடு.

தலை மற்றும் கண்களில் ஏற்படும் பிரச்சினைகளாலும் இந்த பார்வைக் குறைபாடு சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படுகின்றன. அதுமட்டுமன்றி தொடர்ச்சியாக பயன்படுத்தும் கைப்பேசிகள், மடிக்கணினிகள், தூக்கமின்மை ஆகியவற்றின் காரணமாகவே இந்த குறைபாடு இளம் வயதுகளிலேயே ஏற்படுகிறது.

ஆனாலும், அவற்றை குறைத்து கொள்ளக்கூடிய வகையில், ஏராளாமான பாரம்பரிய மருத்துவ குறிப்புக்கள் உள்ளன. எனினும் நம்மில் பலருக்கு அவை தெரிந்திருக்காது. அத்தகைய சில குறிப்புகளை இங்கே காணலாம்.

அதாவது,

கொட்டை நீக்கிய நெல்லிக்காய் மற்றும் கடுக்காய் தோலை நன்கு காயவைத்து அரைத்து பொடி செய்து வைத்துக்கொண்டு தினமும் 2 கிராம் சாப்பிட்டு வந்தால் கண் பார்வை குறைபாடு சரியாகும்.

ஒரு மலை வாழைப்பழம் எடுத்துக்கொண்டு அதோடு நான்கு ஆப்ரிகாட் பழம் மற்றும் அரை கப் தயிரை சேர்த்து ஒரு மணி நேரம் ஊறவைத்து இரவில் படுப்பதற்கு முன்பு உண்டு வந்தால் கண் பார்வை தெளிவாக இருக்கும்.

பசும்பாலில் முருங்கைப்பூவை சேர்த்து நன்கு காய்ச்சி காலை, மாலை என இரு வேளையும் குடித்து வந்தால் கண்களில் ஈரப்பசை அதிகரிக்கும். இதன் மூலம் கண் பார்வை தெளிவு பெரும்.

ஒரு வேலை உணவில் நெய் சேர்த்துக்கொள்வது, தினமும் மதிய உணவில் சிறு கீரை, பண்ணை கீரை, பொன்னாங்கண்ணி கீரை, கேரட் போன்ற உணவு வகைகளை சேர்த்துக்கொள்வதன் மூலம் கண் பார்வை குறைபாடு சரியாகும்.

50 மில்லி அருகம்புல் சாற்றோடு இளநீர் கலந்து அதோடு சிறிதளவு தேன் சேர்த்து காலை, மாலை என இரு வேளையும் சாப்பிட்டுவர கண் பார்வை குறைபாடு சரியாகும்.

மேலும், கண் பார்வை அதிகரிக்க, 4 பேரிச்சம்பழம், 50 கிராம் திராட்சை பழம், மலை வாழை அல்லது ரஸ்தாளி பழம் 2, மாம்பழம் அல்லது பலாச்சுளை 2 துண்டுகள் ஆகியவற்றை தேங்காய் பால் அல்லது பசும்பலோடு சேர்த்து வாரம் இரு முறை சாப்பிட்டு வரலாம். இது தவிர கண்களுக்கு புத்துணர்ச்சி தரும் வகையில் சிறு பயிற்சி செய்தல், கணினி பயன்படுத்துவோர் அவ்வப்போது கண்களை இமைப்பது போன்றவற்றின் மூலம் கண் பார்வை தெளிவு பெரும்.

இவற்றை தொடர்ந்து செய்து பாருங்கள் பார்வை குறைப்பாட்டு உரிய தீர்வினை நிச்சயமாக பெற்றுக்கொள்ளலாம்.

'பார்வைக் குறைபாடு இனி படிப்படியாக குறையும்'
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version