திருகோணமலை மாவட்ட விவசாயக் குழுக்கூட்டமானது மாவட்ட அரசாங்க அதிபர் சாமிந்த
ஹெட்டியாரச்சி அவர்களின் தலைமையில் இன்று (13.08) திருகோணமலை மாவட்ட செயலக பிரதான
மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
கடந்த விவசாயக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் முன்னேற்றங்கள் தொடர்பாகவும்,
முன்வைக்கப்பட்ட ஆலோசனைகள் தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
அத்துடன் 2024, 2025 ஆம் ஆண்டுக்கான பெரும்போக செய்கை
தொடர்பாகவும் திருகோணமலை மாவட்டத்தின் விவசாய துறைசார்ந்த பல்வேறு விடயங்கள்
குறித்தும் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.சுதாகரன், மாவட்ட செயலக விவசாய பணிப்பாளர்
Dr. T.கருணைநாதன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் கே. விஜயதாசன், பிரதேச செயலாளர்கள், உதவி பிரதேச செயலாளர்கள்,
திணைக்கள தலைவர்கள்,விவசாய அமைப்பின் தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.