வெளியானது முக்கிய சான்று

லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனம் உள்நாட்டு LP எரிவாயு சிலிண்டர்களின் எரிவாயு கலவையை மாற்றியமைத்துள்ளது என்பதை நிரூபிக்கும் ஆவணத்தை எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா வெளியிட்டுள்ளார்.

அந்த ஆவணத்தை பகிர்ந்துள்ள எம்.பி, “லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனம், 18 லீற்றர் சிலிண்டரின் எடையை 12.5 கிலோவிலிருந்து 9.2 கிலோவாக மாற்றியபோது, ​​20:80 லிருந்து 50:50 வரை ப்ரோபேன்: பியூட்டேன் கலவையை மாற்றியது என்பதற்கு இது தெளிவான சான்று” என சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த சில வாரங்களில் நாடு முழுவதும் எரிவாயு தொடர்பான பல வெடிப்புகள் பதிவாகியதை அடுத்து, வீட்டு எரிவாயு சிலிண்டர்களின் எரிவாயு கலவை பற்றிய விவாதம் எழுந்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

வெளியானது முக்கிய சான்று
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version