தேர்தலுக்காக நாளை முதல் மூடப்படவுள்ள கிழக்கு மாகாண பாடசாலைகள்

தேர்தலுக்காக நாளை முதல் மூடப்படவுள்ள கிழக்கு மாகாண பாடசாலைகள்

ஜனாதிபதித் தேர்தலின் வாக்கெண்ணும் நடவடிக்கைகள் இடம்பெறவுள்ள கிழக்கு மாகாண பாடசாலைகள் முன்கூட்டியே மூடப்படவுள்ளதாக மாகாண கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, திருகோணமலை மாவட்டத்தில் வாக்கெண்ணும் நிலையமாகப் பயன்படுத்தப்படும் விபுலானந்த மகா வித்தியாலயமும், மட்டக்களப்பு மாவட்டத்தில் வாக்கெண்ணும் நிலையமாகப் பயன்படுத்தப்படும் இந்து கல்லூரியும் நாளை(11.09) முதல் மூடப்படும் என மாகாண கல்விச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

வாக்களிப்பு நிலையங்களாகப் பயன்படுத்தப்படும் ஏனைய பாடசாலைகள் எதிர்வரும் 20ம் திகதி மூடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பாடசாலைகள் எதிர்வரும் 23ம் திகதி மீண்டும் திறக்கப்படவுள்ளதுடன், வாக்கெண்ணும் நிலையமாகப் பயன்படுத்தப்படும் கிழக்கு மாகாணத்தின் இரு பாடசாலைகளும் எதிர்வரும் 24ம் திகதி மீளத் திறக்கப்படும்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version