இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியை இலவசமாகப் பார்வையிடுவதற்குப் பொதுமக்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இரு அணிகளுக்கு இடையிலான முதலாவது போட்டி காலி சர்வதேச மைதானத்தில் எதிர்வரும் 18ம் திகதி புதன்கிழமை நடைபெறவுள்ளது.
போட்டியை இலவசமாகப் பார்வையிட விரும்புபவர்கள் காலி சர்வதேச மைதானத்தின் 4வது நூழைவாயிலினூடாக மைதானத்திற்குள் நுழைய முடியும் என ஶ்ரீ லங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது.