திருமணம் செய்துகொண்ட சித்தார்த் மற்றும் அதிதி ராவ்

திருமணம் செய்துகொண்ட சித்தார்த் மற்றும் அதிதி ராவ்

நடிகர் சித்தார்த்தும், நடிகை அதிதி ராவ் ஹைதாரியும் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள 400 ஆண்டுகள் பழமையான ஸ்ரீரங்கநாயக சுவாமி கோவிலில் திருமணம் செய்துகொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிந்துள்ளனர்.

சித்தார்த்தும், அதிதி ராவ் ஹைதாரியும் காதலிப்பதாக செய்திகள் பரவிய நிலையில் இதனை உறுதிப்படுத்தும் வகையில் இருவரும் இணைந்து பொது இடங்களுக்குச் செல்லும் புகைப்படங்களும் வெளியாகின.

இவர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றதாகவும் சமூக வலைதளத்தில் பதிவிட்டதுடன் விரைவில் திருமணம் குறித்து தகவல் வெளியிடுவோம் என்றும் கூறி இருந்த நிலையில் தற்போது உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

சித்தார்த்-அதிதி தம்பதிக்கு இரசிகர்களும், திரைத்துறையினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

இவர்களது புகைப்படங்கள் தற்போது சமூகவலத்தளங்களில் வைரலாகியுள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version