மகளிர் டி20 உலகக் கிண்ணத்திற்கான இலங்கை குழாம் அறிவிப்பு

மகளிர் டி20 உலகக் கிண்ணத்திற்கான இலங்கை குழாம் அறிவிப்பு

2024ம் ஆண்டிற்கான மகளிர் டி20 உலகக் கிண்ணத்திற்கான இலங்கை மகளிர் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

15 பேர் கொண்ட இலங்கை குழாமுக்கு விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் ஒப்புதல் கிடைக்கப்பெற்றுள்ளதாக ஶ்ரீ லங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.

2024ம் ஆண்டிற்கான மகளிர் டி20 உலக கிண்ணத் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 3ம் திகதி முதல் 20ம் திகதி நடைபெறவுள்ளது.

இதில் பங்கேற்கவுள்ள இலங்கை குழாம் எதிர்வரும் 23ம் திகதி ஐக்கிய அரபு அமீரகம் நோக்கிச் செல்லவுள்ளது.

இலங்கை குழாம்: சாமரி அத்தபத்து(அணித் தலைவி), விஷ்மி குணரத்ன, ஹர்ஷிதா சமரவிக்ரம, ஹஷினி பெரேரா, கவிஷா தில்ஹாரி, நிலாக்ஷி சில்வா, அனுஷ்கா சஞ்சீவனி, உதேஷிகா பிரபோதினி, அச்சினி குலசூரியா, சுகந்திகா குமாரி, சச்சினி நிசன்சலா, இனோஷி பெர்னாண்டோ, சஷினி கிம்ஹானி, அமா காஞ்சனா, இனோகா ரனவீர

ரிசர்வ் வீரர்: கௌஷினி

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version