அவுஸ்ரேலிய தமிழ் கால்பந்து வீரர் நிஷான் வேலுப்பிள்ளை, 2026ம் ஆண்டிற்கான FIFA உலகக் கிண்ணத்திற்கான தகுதிச் சுற்றில் அவுஸ்ரேலியா அணிக்காக அறிமுகமாகி, அணியின் வெற்றிக்குப் பங்காற்றியுள்ளார்.
சீனாவுக்கு எதிரான போட்டியில் இந்த போட்டியில் அவுஸ்ரேலியா 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றியீட்டியது. இதன்போது, இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட 23 வயதான நிஷான் வேலுப்பிள்ளை முக்கிய தருணத்தில் கோல் அடித்து அவுஸ்ரேலியாவின் வெற்றியை உறுதி செய்தார்.
2026ம் ஆண்டிற்கான FIFA உலகக் கிண்ணத்தில் நுழையும் எதிர்பார்ப்பிலுள்ள அவுஸ்ரேலியா கால்பந்தாட்ட அணிக்கு நிஷான் வேலுப்பிள்ளை பெரும் பங்காற்றுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.