யாழ்ப்பாணம், பருத்தித்துறை, தும்பளையை பிறப்பிடமாகவும், வவுனியா, குருமன்காட்டை வசிப்பிடமாகவும் கொண்ட , வேல் முருகன் ஜூவலரி உரிமையாளர் தேசபந்து- கதிரமலை வேல்மாறன் (சமாதான நீதவான்) அவர்கள் 07.09.2021, செவ்வாய்க்கிழமை காலமானார். அன்னார் காலஞ் சென்றவர்களான முருகேசு கதிரமலை, கதிரமலை ராஜலட்சுமி ஆகியோரின் அன்பு மகனும், காலஞ்சென்ற கெளரி வேல்மாறன் அவர்களின் கணவருமாவார். அன்னார் கபிலன், நகுலன், குணாளன் (கனடா), ஜனனி (பிரான்ஸ்) , மயூரா(கனடா) ஆகியோரின் பாசமிகு தகப்பனாரும், கிரியாசக்தி புவிராஜசிங்கம் (கனடா) , ஞானசக்தி லட்சுமிகாந்தன் ஆகியோரின் அன்பு தம்பியும், கதிரமலை சிவபாலன் (நியூ வேல்முருகன்ஜூவலரி உரிமையாளர்), யோகசக்தி பாலசிங்கம், வசந்தி சிவராஜா, சாந்தி சிவபாலகுரு, இந்திராதேவி சத்தியசீலன் (கனடா) ஆகியோரது அன்பு அண்ணனுமாவார். யசோதா கபிலன், பிரியா நகுலன், மீரா குணாளன், தங்கவடிவேலு கஜன், ரவீந்திரன் கீரன் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
அன்னாரது இறுதிக்கிரியையைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.
தகவல்
குடும்பத்தினர்