நானுஓயா – ரதல்ல குறுக்கு வீதியில் விபத்து – ஒருவர் பலி

நானுஓயா - ரதல்ல குறுக்கு வீதியில் விபத்து - ஒருவர் பலி

நானுஓயா – ரதல்ல குறுக்கு வீதியில் வேனும் லொறியும் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 19 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஹட்டன்- நுவரெலியா பிரதான வீதியில் நானுஓயா ரதல்ல குறுக்கு வீதி, சமர்செட் பிரதேசத்தில் நேற்றிரவு இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

வேனும் லொறியும் நேருக்கு நேர் மோதியதில் விபத்து சம்பவித்துள்ளது.

கல்முனை சாய்ந்தமருது பகுதியை சேர்ந்த சிலர் நுவரெலியா நோக்கி பயணித்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர்.

5 தொன்னுக்கும் அதிகமான நிறையுடைய வாகனங்களை அந்த வீதியில் செலுத்துவதற்று தடை விதிக்கப்பட்டிருந்த போதிலும்
லொறியை ஓட்டிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் காயமடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும், விபத்தில் வேனும் லொறியும் பலத்த சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version