பிரபல இயக்குநர் காலமானார்

பிரபல இயக்குநர் காலமானார்

ஒரு கிடாயின் கருணை மனு, சத்திய சோதனை உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் சுரேஷ் சங்கையா தனது 41 ஆவது வயதில் காலமானார்.

கடந்த 2017 ஆம் ஆண்டில் வெளியான ‘ஒரு கிடாயின் கருணை மனு’ திரைப்படம் சுரேஷ் சங்கையா இயக்கிய முதல் படம். புதுமண தம்பதியர்கள் கோயிலுக்கு நேர்த்திக்கடன் செலுத்த ஆடு ஒன்றை பலி கொடுக்க சென்று இருப்பார்கள். அங்கு என்ன நடந்தது என்பதுதான் கதை. விமர்சன ரீதியாக இந்தப் படம் கவனம் பெற்றது.

தொடர்ந்து கடந்த 2023 ஆம் ஆண்டில் அவரது இரண்டாவது படமான ‘சத்திய சோதனை’ படத்தை இயக்கி இருந்தார். ஒரு கொலையை மையமாக வைத்து பிளாக் காமெடி பாணியில் படத்தை இயக்கி இருந்தார்.

ராஜபாளையம் அருகில் உள்ள கரிசல்குளத்தை சேர்ந்த அவர் கல்லீரல் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை எடுத்து வந்த நிலையில் .
சிகிச்சை பலனின்றி அவர் நேற்று (15.11) காலமானார்.

அவரது மறைவு திரையுலகை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version