A.R.ரகுமான், சாய்ரா பானு விவாகரத்து

A.R.ரகுமான், சாய்ரா பானு விவாகரத்து

இசையமைப்பாளர் ரகுமானை பிரிவதாக அவரது மனைவி சாய்ரா பானு அறிவித்துள்ளார்.

29 வருட கால மணவாழ்க்கையை முடித்துக்கொள்வதாக சாய்ரா பானு அவரது சட்டத்தரணி மூலம் அறிவிப்பு விடுத்துள்ளார்.

அவரது அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது,

ஒருவரை ஒருவர் ஆழமாக நேசித்தபோதிலும் உணர்ச்சிப்போராட்டங்கள் நிகழ்ந்துள்ளன.
அந்தசிரமங்களே இருவருக்குமிடையில் தீர்க்க முடியாத இடைவெளியை உருவாக்கியுள்ளது.

இந்த இடைவெளியை இருவராலும் சரி செய்ய முடியாது. வாழ்வில் ஏற்பட்ட வலி மற்றும் வேதனையால் தான் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

ஆழமான யோசனைக்கு பிறகே பிரிவது என்ற கடினமான முடிவை எடுத்துள்ளதால் இந்த சவாலான தருணத்தில்
தனிப்பட்ட உணர்வுகளுக்கு மக்கள் மதிப்பளிக்க வேண்டும்” என சாய்ரா பானு தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து A.R.ரகுமானின் மகன் அமீன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்

“இந்த நேரத்தில் எங்களது தனிப்பட்ட உணர்வுகளுக்கு மதிப்பளிக்குமாறு அனைவரிடமும் கேட்டுக்கொள்கிறன்றோம்.
புரிந்துகொண்டமைக்கு நன்றி” என பதிவிட்டுள்ளார்.

சினிமா துறையில் நடிகர்களான தனுஷ், ஜெயம்ரவி, இசையமைப்பாளர் G.V.பிரகாஷ் மற்றும் D.இமான் ஆகிய
பல நட்சத்திர தம்பதிகள் அண்மைய காலங்களில் விவாகரத்தான நிலையில்
அந்த வரிசையில் தற்போது ரகுமான் தம்பதியினரும் இணைந்துள்ளனர்.

A.R.ரகுமான் சாய்ரா பானு தம்பதியினருக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ள நிலையில்
இவர்களது விவாகரத்து இரசிகர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version