அவுஸ்திரேலியாவில் அதிரடி காட்டும் இந்தியா அணி

அவுஸ்திரேலியா மற்றும் இந்தியா அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி அவுஸ்திரேலியா பெர்த்தில் நடைபெற்று வருகிறது. அவுஸ்திரேலியா A அணியை முதல் இன்னிங்சில் உருட்டி எடுத்த இந்தியா அணி தமது இரண்டாம் இன்னிங்சில் மிகவும் பலமான ஆரம்பத்தை பெற்று 218 ஓட்டங்களினால் முன்னிலையில் திகழ்கிறது. ஆடுகளம் இவ்வாறு திடீர் மாற்றம் காட்டுகிறதா என்ற கேள்வியுமுண்டுதான்.

அவுஸ்திரேலியா அணி முதல் இன்னிங்சில் 104 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்தது. மிற்செல் ஸ்டார்க் 26 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து இன்று இறுதியாக ஆட்டமிழந்தார். இவரின் விக்கெட்டை கைப்பற்ற இந்தியா அணி பெரிதும் போராட வேண்டிய நிலை ஏற்பட்து. அலெக்ஸ் கேரி 21 ஓட்டங்களையும், ட்ரவிஸ் ஹெட் 11 ஓட்டங்களையும் பெற்றனர். இந்தியா அணியின் பந்துவீச்சில் ஜஸ்பிரிட் பும்ரா 5 விக்கெட்ளையும், அறிமுக வீரர் ஹர்ஷித் ராணா 3 விக்கெட்களையும், மொஹமட் சிராஜ் 2 விக்கெட்களையும் கைப்பற்றினார்கள்.

இந்தியா அணி இரண்டாம் இன்னிங்சில் விக்கெட் இழப்பின்றி 172 ஓட்டங்களை பெற்றுள்ளது. லோகேஷ் ராகுல் 62 ஓட்டங்களை, ஜஷாஸ்வி ஜய்ஷ்வால் 90 ஓட்டங்களையும் பெற்றுள்ளனர்.

இந்தப் போட்டியின் முதல் நாள் எதிர்பார்ப்புகளை உடைத்தெறிந்த நாள். ஒரே நாளில் 17 விக்கெட்கள் வீழ்த்தப்பட்டன. முதல் இன்னிங்சில் இந்தியா அணி சகல விக்கெட்களையும் இழந்து 150 ஓட்டங்களைப் பெற்றது. அவுஸ்திரேலியா அணி ஆக்ரோஷம் காட்டுகிறது என எதிர்பார்க்க முதல் நாள் நிறைவில் அவுஸ்திரேலியா அணி 67 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்ளை இழந்து மேலும் அதிர்ச்சியளித்தது. இந்திய அணியின் துடுப்பாட்டத்தில் தனது முதற் போட்டியில் களமிறங்கிய நிதிஸ்குமார் ரெட்டி 41 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். ரிஷாப் பான்ட் 37 ஓட்டங்கள். லோகேஷ் ராகுல் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கினார். அவர் 26 ஓட்டங்கள். அவுஸ்திரேலயா அணியின் பந்துவீச்சில் ஜோஷ் ஹெசல்வூட் 4 விக்கெட்களையும், மிற்செல் ஸ்டார்க், பட் கம்மின்ஸ், மிச்செல் மார்ஷ் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களை கைப்பற்றினார்கள்.

ரோஹித் ஷர்மா விளையாடாத நிலையில் ஜஸ்பிரிட் பும்ரா இந்தியா அணிக்கு தலைமை தாங்குகிறார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version