விடுதலை பாகம் 2 – ட்ரைலர் வெளியானது

விடுதலை பாகம் 2 - ட்ரைலர் வெளியானது

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்திருக்கும் “விடுதலை பாகம் 2” திரைப்படம்
எதிர்வரும் டிசம்பர் மாதம் 20ஆம் திகதி (20.12.) திரைக்கு வர உள்ளது.

இத்திரைப்படத்தின் ட்ரைலர் நேற்று இரவு (26.11) வெளியாகியுள்ளது.

நடிகர் சூரி, நடிகை மஞ்சு வாரியார், இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் மற்றும் ராஜீவ் மேனன் ஆகியோர் நடித்திருக்கும் இத்திரைப்படத்திற்க்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார்.

சில தினங்களுக்கு முன்பு இத்திரைப்படத்திலுருந்து “தினம் தினமும்” என்ற பாடல் வெளியாகி இரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ள நிலையில்
தற்போது வெளியாகி இருக்கும் ட்ரைலர் இத்திரைப்படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

நடிகர் சூரி பிரதான காதாபாத்திரத்தில் நடித்து கடந்த வருடம் மார்ச் மாதம் (03.24) இத்திரைப்படத்தின் முதலாம் பாகம் வெளியாகி பெரும் வெற்றி பெற்றிருந்த நிலையில் இந்த “விடுதலை பாகம் 2” திரைப்படமும் மாபெரும் வெற்றி பெரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

Viduthalai Part 2 - Official Trailer | Vetri Maaran | Vijay Sethupathi | Ilayaraaja | Soori
Social Share
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version