நுவரெலியா மாவட்டத்தில் அனர்த்தங்களுக்கு உள்ளான மக்களை முன்னாள் அமைச்சர் ஜீவன் தொண்டமான் நேரில் சென்று பார்வையிட்டதுடன், அவர்களுக்கான நிவாரணப்பொதிகள் வழங்கி வைத்தார்.
கடந்த சில நாட்களாக நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக மக்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகியிருந்தார்கள்.
அந்த வகையில் நுவரெலியா மாவட்டத்திலும் மக்கள் அனர்த்தங்களுக்கு முகம் கொடுத்திருந்தார்கள்.
இதில் முதற்கட்டமாக நுவரெலியா மாவட்டத்தில் பாதிப்புக்குள்ளான டிக்கோயா, பொகவந்தலாவ, அக்கரபத்தனை ஆகிய பகுதி மக்களுக்கான நிவாரன பொதிகள் நேற்று முன்தினம் (30.11) வழங்கி வைக்கப்பட்டன.
மேலும் பாதிப்புக்குள்ளான மக்களுக்கான தேவையான ஏற்பாடுகளை செய்துக் கொடுக்குமாறும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டுள்ளாத ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.