வலுவான நிலையில் தென்னாபிரிக்கா

வலுவான நிலையில் தென்னாபிரிக்கா

இலங்கை, தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று ஹெபர்ஹாவில் ஆரம்பித்து நடைபெற்று வருகின்றது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் தென்னாபிரிக்கா அணி துடுப்பாடி வருகிறது. ஆரம்பத்தில் இலங்கை அணியின் பந்துவீச்சுக்கு தடுமாறிய தென்னாபிரிக்கா அணி மத்திய வரிசையில் சிறப்பாக துடுப்பாடி பலமான நிலையை அடைந்துள்ளது.

ரையான் ரிக்கெல்டன், ரெம்பா பவுமா ஆகியோர் இணைந்து 133 ஓட்டங்களை பெற்றுக்கொண்டனர். இந்த இணைப்பாட்டம் மூலமாக தென்னாபிரிக்கா அணி மீள் வருகையினை மேற்கொண்டது. முதல் நாள் நிறைவில் 7 விக்கெட்களை இழந்து 269 ஓட்டங்களை தென்னாபிரிக்கா அணி பெற்றுள்ளது. ரையான் ரிக்கெல்டன் 101 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். ரெம்பா பவுமா 78 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார். கைல் வெரைன் ஆட்டமிழக்காமல் 48 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். இலங்கை அணியின் பந்துவீச்சில் லஹிரு குமாரா 3 விக்கெட்களையும், அசித்த பெர்னாண்டோ 2 விக்கெட்களையும், விஸ்வ பெர்னாண்டோ, பிரபாத் ஜெயசூர்யா ஆகியோர் தலா ஒரு விக்கெட்களை கைப்பற்றினார்கள்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version