நுவரெலியா, டிப்போவில் பணிபுரிந்த காவலாளி ஒருவரைக் கொலை செய்து, டிப்போவில் இருந்த 9 இலட்சம் ரூபா பணத்தை சிலர் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.
டிப்போவில் காவலராகப் பணியாற்றிய 85 வயதான முதியவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
சிலர் காவலரை கொலை செய்து டிப்போவின் அலுமாரியில் இருந்த சுமார் 9 லட்சம் ரூபாவை
கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
காவலர் தனது பாதுகாப்பு அறையில் தங்கியிருந்ததாகவும், அப்போது சிலர் கூரிய ஆயுதத்தால் தலையில் தாக்கியுள்ளதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொலைச் சம்பவத்தின் போது டிப்போவிற்குப் பொறுப்பான அதிகாரியும் காசாளரும் டிப்போவில் தங்கியிருந்த போதிலும் அவர்கள் உறங்கிக் கொண்டிருந்த வேளையில் கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.
நுவரெலியா டிப்போவில் நேற்று (05)பயணித்த பஸ்களின் வருமானம், வங்கிப் பணிகளுக்காக அலுமாரியில் வைக்கப்பட்டிருந்ததாக நுவரெலியா டிப்போவின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.