சமூக ஊடகங்களினூடாக பாரிய நிதி மோசடி

சமூக ஊடகங்களினூடாக பாரிய நிதி மோசடி

சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி நபரொருவரிடமிருந்து நிதி மோசடி செய்த குற்றச்சாட்டில்
இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் நேற்றைய தினம் (12.06) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த இளைஞன் நபரொருவரிடமிருந்து 500,000 ரூபாவிற்கும் மேல் பணம்பெற்றுள்ளதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்கள் மூலம் பணம் சம்பாதிக்க முடியும் என கூறி மோசடி இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வடமேல் மாகாண பொலிஸ் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version