கொவிட் பரிசோதனைகளை விரைந்து மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தல்

கொவிட் 19 தொற்று அறிகுறிகள் தமக்கு இருப்பதாக உணரும் பட்சத்தில் உடனடியாக முன்வந்து ரெபிட் அன்டிஜன் பரிசோதனைகளை முன்னெடுத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.


அதற்கமைய கொழும்பு – பொரளை, கெம்பல் மைதானத்திற்கு வருகை தந்து கொவிட் பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு கொழும்பு மாநகர சபையின் பிராந்திய தொற்று நோயியல் நிபுணர் வைத்தியர் தினு குருகே தெரிவித்துள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை தவிர்ந்த ஏனைய நாட்களில் காலை 09.30 – 11.30 வரை கொவிட் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொவிட் பரிசோதனைகளை விரைந்து மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தல்
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version