LPL போட்டி முடிவுகள், புள்ளி பட்டியல்

லங்கா பிரீமியர் லீக் தொடரில் நேற்று (8/12/2021) முதற் போட்டியாக தம்புள்ள ஜியன்ட்ஸ் மற்றும் கொழும்பு ஸ்டார்ஸ் அணிகளுக்கிடையில் நடைபெற்றது. இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தம்புள்ள ஜியன்ட்ஸ் அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது. தம்புள்ள ஜியன்ட்ஸ் அணி மூன்று போட்டிகளிலும் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று துடுப்பாட்டத்தையே தெரிவு செய்தது.

முதலில் துடுப்பாடிய தம்புள்ள ஜியன்ட்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 195 ஓட்டங்களை பெற்றது. லங்கா பிரீமியர் லீக் 2021 இல் கூடுதலான ஓட்டங்களை தம்புள்ள ஜியன்ட்ஸ் அணி பெற்றது. இதில் பில் சோல்ட் 62(34) ஓட்டங்களையும், நஜிபுல்லா சத்ரன் 54(40) ஓட்டங்களையும், டசூன் ஷானக்க 38(25) ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் துஷ்மந்த சமீர 3 விக்கெட்களையும், கீமோ பவுல், அகில தனஞ்சய, சீக்குகே பிரசன்னா ஆகியோர் தலா .ஒவ்வொரு விக்கெட்களை கைப்பற்றினார்கள்.

196 என்ற வெற்றி இலக்கோடு துடுப்பாடிய கொழும்பு ஸ்டார்ஸ் அணி 18.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 177 ஓட்டங்களை பெற்றது. இதில் தினேஷ் சன்டிமல் 26(16) ஓட்டங்களையும், டொம் பன்டொன் 23(14) ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் நுவான் பிரதீப் 3 விக்கெட்களையும், இம்ரான் தாஹிர், தரிந்து ரத்னாயக்க, சமிக்க கருணாரட்ன ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களை கைப்பற்றினார்கள்.

தம்புள்ள ஜியன்ட்ஸ் அணி 18 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது. இந்த போட்டியின் நாயகனாக பில் சோல்ட் தெரிவு செய்யப்பட்டார்.

கண்டி வொரியேர்ஸ், ஜப்னா கிங்ஸ் அணிகளுக்கிடையிலான இரண்டாவது போட்டி மழை காரணமாக 14 ஓவர்கள் கொண்ட போட்டியாக மாற்றப்பட்டது. முதலில் துடுப்பாடிய ஜப்னா கிங்ஸ் அணி 14ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 181 ஓட்டங்களை பெற்றது. இதில் அவிஷ்க பெர்னான்டோ 53(23), திசர பெரேரா53 (21), ஓட்டங்கள பெற்றனர். ஷிராஸ் அஹமட் பந்துவீச்சில் 3 விக்கெட்களை கைப்பற்றினார்.
பந்துவீச்சில் ஜைடேன் சீல்ஸ் இரண்டு விக்கெட்களை கைப்பற்றினார். போட்டியின் நாயகனாக சுரங்க லக்மால் தெரிவு செய்யப்பட்டார்.

புள்ளி பட்டியல்

இடம்அணிபோட்டிவெற்றிதோல்விபுள்ளிஒ.நி.ச.வே
01கோல் கிளாடியேட்டர்ஸ்  32140.762
02 ஜப்னா கிங்ஸ்  32140.540
03தம்புள்ள ஜியன்ட்ஸ்  3214-0.531
04கொழும்பு ஸ்டார்ஸ்  21120.065
05கண்டி வொரியேர்ஸ்3030-0.823
LPL போட்டி முடிவுகள், புள்ளி பட்டியல்
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version