மனித உரிமைகள் ஆணைக்குழு விடுத்துள்ள அழைப்பு

எரிவாயு விவகாரத்தில் பொறுப்பற்ற விதமாக செயற்பட்டமை தொடர்பான விசாரணைகளுக்காக 3 அரச நிறுவனங்கள் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளன.

அதன்படி இலங்கை தரநிர்ணய நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம், நுகர்வோர் விவகார அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் செயலாளர் ஆகியோருக்கே இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த மூவரும் இன்று (09/12) முற்பகல் 11 மணிக்கு மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்னிலையாக வேண்டும் என அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

மனித உரிமைகள் ஆணைக்குழு விடுத்துள்ள அழைப்பு
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version