பாராளுமன்றில் மன்னிப்புக் கோரிய சாணக்கியன் எம்.பி

பாராளுமன்றில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடந்த சம்பவத்திற்கு தனது கண்டனத்தை பதிவு செய்வதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியின் தெரிவித்துள்ளார்.

நேற்று (08/12) இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், ‘எனது நண்பரான மனுஷ நாணயக்காரவுக்கு நடந்த இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த தற்போது சபாநாயகர் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் சில சிரேஷ்ட உறுப்பினர்களும் தொடர்புப்பட்டுள்ளார்கள். எனவே, இவை தொடர்பாக எதிர்க்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என நான் நம்புகிறேன்.

அதேபோன்று, பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி குமார விஜேரத்ன தொடர்பாக பின்வரிசை உறுப்பினர் ஒருவர் வெளியிட்ட கூற்று தொடர்பாக, நான் ஒரு ஆண் பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில், ரோஹினி எம்.பியிடமும் ஏனைய பெண் பாராளுமன்ற உறுப்பினர்களிடமும் இவ்வேளையில் மன்னிப்பைக் கேட்கிறேன்.

ஆனால், குறித்த உறுப்பினர் அவ்வாறான கருத்தை வெளியிடும்போது, அவரை சுற்றி அமர்ந்திருந்த உறுப்பினர்கள் அதைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தமையானது, உறுப்பினரின் அந்தக் கருத்தைவிட கேவலமானது. அந்த இளம் பாராளுமன்ற உறுப்பினரின் தாய் மற்றும் சகோதரிகளிடமும் நாம் மன்னிப்பைக் கேட்க வேண்டும். இவர்கள் மட்டுமன்றி, நாட்டிலுள்ள ஒட்டுமொத்த பெண்களிடமும் நாம் மன்னிப்புக் கோர வேண்டும்.

அத்துடன் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன, இதுதொடர்பாக நடவடிக்கை எடுத்து, குறித்த உறுப்பினரை 2 வாரங்களுக்கேனும் பாராளுமன்றிலிருந்து இடைநிறுத்தம் செய்து, ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்துகிறேன்’ எனத் தெரிவித்தார்.

பாராளுமன்றில் மன்னிப்புக் கோரிய சாணக்கியன் எம்.பி
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version