மாணவி கடத்தல் சம்பவம்- பொலிஸ் அதிகாரி பணி இடைநீக்கம்

மாணவி கடத்தல் சம்பவம்- பொலிஸ் அதிகாரி பணி இடைநீக்கம்

கண்டி, தவுலகல பகுதியில் அண்மையில் மாணவி ஒருவர் கடத்தப்பட்ட சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுக்க தவறிய முதன்மை பொலிஸ் பரிசோதகர் ஒருவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். அதேவேளை பெண் பொலிஸ் பரிசோதகர் மற்றும் உதவி பொலிஸ் பரிசோதகர் ஆகிய இரு பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

18 வயதான மாணவி கடந்த 19 ஆம் திகதி கடத்தப்பட்ட வேளையில், கம்பஹாவை சேர்ந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவரினால் சம்பவம் தொடர்பாக தவுலகல பொலிஸ் நிலையத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பொலிஸ் நிலைய பதில் நிலைய பொறுப்பதிகாரியான முதன்மை பொலிஸ் பரிசோதகர் மற்றும் ஏனைய பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் அசண்டையீனமாக செயற்பட்டுள்ளமை உள்ளக விசாரணைகளில் தெரியவந்ததனை தொடர்ந்து, மத்திய மாகாண சிரேஷ்ட உதவிப் பொலிஸ் மா அதிபரினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version