நடிகர் விஷால் சவால் விட்டு மாட்டிக்கொண்டு முழிக்கும் நிலையில் இருக்கிறார்.
பல திரைப்படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றி, செல்லமே திரைப்படம் மூலம் கதாநாயகன் ஆனவர் தான் நம் விஷால். அந்த படத்தின் வெற்றியால் நடிப்பில் தொடர்ந்து கவனம் செலுத்தினார். இந்த நிலையில் அடுத்த மாதம் முதல் இயக்குநர் ஆவப்போவதாக அறிவித்துள்ளார்.
இயக்குநர் மிஷ்கினின் இயக்கத்தில் விஷால் நடித்து வெளிவந்த துப்பறிவாளன் படம் இரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் அதன் 2ஆம் பாகம் இதே கூட்டணியில் உருவானது.
இதன் முதல்கட்ட படப்பிடிப்பு இலண்டனில் நடந்தபோது மிஷ்கினுக்கும், விஷாலுக்கும் மோதல் ஏற்பட்டதால் படத்தை இயக்க முடியாது என மறுப்பு தெரிவித்து மிஷ்கின் வெளியேறியிருந்தார். இதையடுத்து துப்பறிவாளன் 2ஆம் பாகத்தை நானே இயக்குவேன் என்று விஷால் அறிவித்திருந்தார்.
அதன் படப்பிடிப்பை ஜனவரி மாதம் இலண்டனில் தொடங்க இருப்பதாகவும், 3 மாதங்களில் படப்பிடிப்பை நடத்தி முடிக்க திட்டமிட்டு உள்ளதாகவும் விஷால் அறிவித்திருந்த நிலையில், ஆனாலும் பட வேலைகளை தொடங்காமல் வேறு படங்களில் அவர் நடித்து வந்ததால் துப்பறிவாளன் – 2 படத்தை கிடப்பில் போட்டுவிட்டார். விஷால் இயக்கும் முதல் படம் என்பதால் இரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்த நிலையில் தற்சமயம், விஷால் சவால் விட்டு மாட்டிக்கொண்டு முழிப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.