மாணிக்க கங்கை அருகில் கைவிடப்பட்ட மாளிகை?

மாணிக்க கங்கை அருகில் கைவிடப்பட்ட மாளிகை?

கதிர்காமம், மாணிக்க கங்கை அருகில், அரசாங்க ஒதிக்கீட்டு காணியில் அமைக்கப்பட்டுள்ள சொகுசு மாளிகை யாருடையது என பலர் மத்தியிலும் கேள்வி எழுந்துள்ளது. தற்போது கைவிடப்பட்ட நிலையில் உரிமையாளரின்றி இந்த கட்டடம் காணப்படுகிறது. குற்றப்புலனாய்வயு துறையினர் இந்த கட்டிடம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த கட்டடத்துக்கான மின் இணைப்பு G.ராஜபக்ஷ எனும் நபரின் பெயரில் காணப்படுகிறது. இந்த நிலையில் முன்னால ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவிடம் விசாரணை மேற்கொண்ட வேளையில் அதனை அவர் மறுத்திருந்தார்.தற்போது யார் அந்த G.ராஜபக்ஷ என்ற கேள்வியெழுந்துள்ளது. ஆளடையாளமின்றி மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாக என கேள்வியும் எழுகிறது.

இந்த கட்டடம் பாதுகாப்பு படையினரை வைத்து அமைக்கப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன என ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version