உலக சுகாதார ஸ்தாபனத்தின் பரிந்துரைகளின் கீழ் ஒமிக்ரொனை எதிர்கொள்ள ஏனைய உலக நாடுகளில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை மதிப்பீடு செய்த பின்னரே தேவையான தீர்மானங்கள் எடுக்கப்படும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம் வைத்திய அதிகாரி ஹேமந்த ஹேரத் இன்று (09/12) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இவ்வாறு தெரிவித்தார்.
அத்துடன் நாட்டின் நிலைமையை பொறுத்து தேவை ஏற்பட்டால் மாத்திரமே கொவிட் கட்டுபாடு தொடர்பான புதிய தீர்மானங்கள் எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.