தவிசாளரின் விளக்கமறியல் நீடிப்பு

கிண்ணியா – குறிஞ்சாக்கேணி மிதப்பு படகு கவிழ்ந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட நகர சபை தவிசாளர் எஸ்.எச்.எம் நளீமை நாளை (10/12) வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த படகை செலுத்திய மூவருக்கும் அதன் தரம் குறித்து ஆராயாது அனுமதி வழங்கிய குற்றச்சாட்டின் காரணமாகவே சபையின் தவிசாளர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.

அதற்கமைய படகு செலுத்திய 3 சந்தேகநபர்களின் வழக்கு விசாரணைகள் நேற்று (08/12) இடம்பெற்றிருந்த நிலையில், குறித்த மூவரையும் எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இதனை தொடர்ந்து கிண்ணியா நகர சபை தவிசாளர் மீதான வழக்கு இன்றைய தினம் (09/12) திருகோணமலை நீதிமன்ற நீதவான் பயாஸ் ரசாக் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, கிண்ணியா நகர சபை தவிசாளர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி சுகவீனம் காரணமாக சிகிச்சை பெற்று வருவதாகவும் இதனை கருத்தில் கொண்டு பிணை வழங்குமாறு சட்டத்தரணி சார்பில் நீதிமன்றில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.


இதனையடுத்து நாளை (10/12) வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் கட்டளையிட்டார்.

(திருகோணமலை நிருபர்)

தவிசாளரின் விளக்கமறியல் நீடிப்பு
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version