இலங்கையின் பழம்பெரும் திரைப்பட இயக்குநர் சுனில் சோம பீரிஸ் இன்று (10/12) தனது 72ஆவது வயதில் காலமானார்.
இன்று காலை அவரது வீட்டில் இருந்தவாறே அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையில் உருவான அதிகமான திரைப்படங்களை இயக்கிய பெருமை இவரையே சாரும். அதற்கமைய இவர் 45 திரைப்படங்களை இயக்கியுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
இயக்கம் மட்டுமல்லாது திரைக்கதை வசனம் எழுதுதல் மற்றும் நடிகராகவும் பணியாற்றியுள்ளார். 1985ஆம் ஆண்டு இவர் இயக்கிய ‘ஒபட்ட திவுர கியன்னம’ என்ற தனது முதலாவது திரைப்படத்தில் தொடங்கி 25 வருடங்களில் 45 திரைப்படங்களை இயக்கி சாதனைப் படைத்த பெருமைக்குரியவராவார்.