இந்தோனேசியா தலைநரகர் ஜகார்தாவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலை ஏற்பட்ட இந்த தீ விபத்தில் இதுவரை 41 பேர் பலியாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பலர் காயமடைந்த நிலையில் வைத்தியாசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பலர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அங்கிருந்து வரும் செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அளவுக்கு அதிகமானவர்கள் சிறைகளில் அடைக்கப்பட்டமையே அதிக உயிரிழப்பு காரணம் என ஊடங்கள் தெரிவித்துள்ளன. 40 பேர் அடைக்கப்படக்கூடிய சிறைகூடம் ஒன்றில் 122 பேர் அடைக்கப்பட்டு இருந்ததாகவும், 600 பேர் அடைக்கப்படக்கூடிய சிறையில் 2000 பேர் அடைக்கப்பட்டுளளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீ பற்றிய சிறைக்கூடத்தில் போதை வஸ்து சம்மந்தப்பட்ட குற்றங்களுக்காக சிறை வைக்கப்பட்டவர்களே அதிகம் காணப்பட்டுள்ளனர்.