‘வாகன இறக்குமதி இனி இல்லை’ – நிதியமைச்சர்

நாட்டிற்கு வாகனங்களை இறக்குமதி செய்வதில்லை எனவும், அடுத்த வருடத்திற்கு புதிய ஊழியர்களுக்கான நியமனங்களை உள்வாங்குவதில்லை எனவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நேற்று (09/12) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அமைச்சர் இவ்வாறு கூறினார்.

இதுதொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர், எதிர்வரும் வருடம் மிகவும் கடினமானதாக இருக்கும் எனவும், தற்போதுள்ள ஊழியர்கள் மற்றும் வாகனங்களை மாத்திரம் வைத்து அரசாங்கம் அடுத்த வருடத்தை கடக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

நாட்டின் தற்போதைய சூழ்நிலையில், அரசாங்கத்தால் வாகனங்களை இறக்குமதி செய்ய முடியவில்லை என்றும் அவர் மேலும் கூறினார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version