மலேஷிய முதலீட்டார் குழு – விவசாயத் துறை அமைச்சர் சந்திப்பு

இயற்கை உர உற்பத்தியில் முதலீடு செய்ய விரும்பும் மலேஷிய முதலீட்டு முகவர்கள் குழுவுக்கும் விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது.

விவசாய அமைச்சில் குறித்த சந்திப்பு நேற்று (09/12) இடம்பெற்றது.

விவசாயத்தில் உயர் பதவியை வகிக்கும் மலேஷியா, ஆண்டு முழுவதும் பயிர் உற்பத்தி செய்யும் நாடாக தங்கள் தொழில்நுட்ப அறிவை இலங்கையுடன் பகிர்ந்து கொள்ள விரும்பியுள்ளதாகவும், அரசு சார்ந்த உர நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்து, அவர்கள் நாட்டிற்கு தேவையான உர உற்பத்தியை முதலீடு செய்ய தயாராகவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் மலேஷிய முதலீட்டு முகவர்கள் மற்றும் இலங்கை உர நிறுவனத்தின் தலைவர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மலேஷிய  முதலீட்டார் குழு – விவசாயத் துறை அமைச்சர் சந்திப்பு
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version